ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைத்துள்ளனர். ஆனால் தென்கொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பள்ளி கல்லூரிகள் மட்டுமே மூடப்பட்டன. திரையரங்குகள், மால்கள், கடைகள் உள்பட அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன
இதுவரை தென்கொரியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர்கள் பாதிக்கபப்ட்டு இருந்தாலும் அவர்களில்5000 பேர் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும் இதுவரை அங்கு 144 பேர் மட்டுமே பலியாகி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எப்படி சாத்தியமாயிற்று?
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எங்கெங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அவர்கள் யார் யாரெல்லாம் தொட்டார்கள் என்பதையும் கண்டுபிடித்து உடனடியாக அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
மேலும் உடனுக்குடன் யார் யாருக்கு கொரோனா இருக்கிறது என்பதை உறுதி செய்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா இல்லை என்றால் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதைவிட முக்கியமாக தென்கொரிய பொதுமக்களும் அரசின் முயற்சிக்கு 100% ஒத்துழைப்பு கொடுத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக தெரிந்தால் அவர்களே அரசு மருத்துவமனைக்கு முன் வந்து தங்களை பரிசோதித்துக் கொள்ள முன்வந்தனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு, அரசின் அதிரடி நடவடிக்கை, சிசிடிவி, ஜிபிஎஸ் போன்ற டெக்னாலஜியை பயன்படுத்துதல் ஆகியவற்றால் தென் கொரியா கொரோனா வைரஸிலிருந்து மிக வேகமாக மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது