Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவை விட ஊரடங்கு உத்தரவால் தான் அதிக ஆபத்து: ராகுல்காந்தி

கொரோனாவை விட ஊரடங்கு உத்தரவால் தான் அதிக ஆபத்து: ராகுல்காந்தி
, ஞாயிறு, 29 மார்ச் 2020 (18:29 IST)
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் மிக அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதன் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், அபராதம் விதிக்கப்படும் வருகின்றன. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இன்றி இருக்கும் பொதுமக்கள் அபராதத்தை எப்படி கட்ட முடியும் என்ற ஒரு எண்ணமே இல்லாமல் அரசு செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
 
மேலும் ராகுல் காந்தி இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள உதவித்தொகை விரைவில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகையை செலுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை உருவாக்கிய மறுநாள் குழந்தை பிரசவித்த இந்தியப் பெண்