சபரிமலையில் பதற்றம்: 50 வயது பெண்மணியை உள்ளே விடாமல் போராட்டம்

செவ்வாய், 6 நவம்பர் 2018 (14:37 IST)
சபரிமலையில் 50 வயது தாண்டிய பெண்ணை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்திய 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் 4000 பேரை கைது செய்தனர்.
 
நேற்று மாலை மீண்டும் நடை திறக்கப்பட்டது.  கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இன்று சபரிமலைக்கும் 50 வயாதுக்குட்பட்ட பெண் தரிசனம் செய்யப்போவதாக வெளியான புரளியை நம்பி பெண் ஒருவரை கோவிலுக்குள் செல்ல விடாமால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
 
பின்னர் அவர் 50 வயதைக் கடந்தவர் என தெரிந்ததால், அவரை போராட்டாக்காரர்கள் அனுப்பினர். அவரை போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பாக சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர்.
 
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 'சர்கார்' திரைவிமர்சனம்