Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிடிவி தினகரனின் உண்ணாவிரத தேதியை மாற்றிய சூரசம்ஹாசம்

Advertiesment
பழனிசாமி | டிடிவி தினகரன் | உண்ணாவிரதப் போராட்டம் | ttv dhinakaran | politics | hunger strike | hunger protest | AMMK | admk
, திங்கள், 5 நவம்பர் 2018 (19:37 IST)
அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 13ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த உண்ணாவிரதம் திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்தும்,  திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியை மேம்பாட்டை கவனிக்காத அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், நவம்பர் 13ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த போராட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதே 13ஆம் தேதி திருப்போரூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாச நிகழ்ச்சி நடைபெறுவதால் டிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டம் நவம்பர் 13ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தினகரன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைக்க வருகை தருவார் என்றும் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனுக்கு சூடு வைத்த தாய், கள்ளக்காதலன் கைது