பரிட்சையில் தோல்வி அடைய சாமி தான் காரணம்.. கடவுள் சிலையை உடைத்த சிறுவன் கைது..!
, திங்கள், 18 நவம்பர் 2024 (12:33 IST)
பத்தாம் வகுப்பு பரீட்சையில் தோல்வியடைய சாமி தான் காரணம் என்று கடவுள் சிலையை உடைத்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு தேர்வில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்தான். இதனை அடுத்து தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய அந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்று புவனேஸ்வரி சிலையை உடைத்து கீழே தள்ளியுள்ளான்.
சிலை உடைந்து கிடப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அருகில் உள்ள சிசிடிவி காட்சியின் மூலம் சிறுவன் தான் சிலையை உடைத்தார் என்பதை கண்டறிந்த நேரம்.
இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு தற்போது சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்