Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணத்தை பறித்த 8 வயது சிறுவன்.. என்ன நடந்தது?

Advertiesment
Nivetha Pethuraj

Siva

, திங்கள், 4 நவம்பர் 2024 (09:19 IST)
நடிகை நிவேதா பெத்துராஜிடம் எட்டு வயது சிறுவன் பணத்தை பறித்து விட்டதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நிவேதா, உதயநிதி ஸ்டாலின் நடித்த ’பொதுவாக எம்மனசு தங்கம்’ உட்பட சில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை அடையார் சிக்னலில் எட்டு வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டதாக கூறியுள்ளார். அந்த சிறுவன் ஒரு புத்தகத்தை தன்னிடம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதாகவும், நான் 100 ரூபாய் கொடுத்தபோது, அந்த சிறுவன் 500 ரூபாய் கேட்டதாகவும், புத்தகத்தை திருப்பி கொடுத்துவிட்டு 100 ரூபாயை மீண்டும் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் திடீரென புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன், தனது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். "இதுபோன்ற பிரச்சனையை நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பி நிவேதா பெத்துராஜ் செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவானாவின் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!