தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பெண் ஓட்டு நர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 500 பெண் ஓட்டு நர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் ரூ.97.55 கோடியில் 11 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் எனவும், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பெண் ஓட்டு நர்களிடம் மகிழ்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.