Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி! – காங்கிரஸ்

Advertiesment
இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி! – காங்கிரஸ்
, புதன், 4 மே 2022 (13:02 IST)
இலங்கை மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய நிதி வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.

 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பலர் படகுகள் மூலமாக தமிழகத்தை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது.
 
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி அனுப்பும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார்: அண்ணாமலை அறிவிப்பு