Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

Advertiesment
Noida youngster money

Prasanth K

, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (14:14 IST)

நொய்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் தாயாருடைய வங்கி கணக்கில் உலக கோடீஸ்வரர்களை விட அதிகமான பணம் இருந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபக். இவரது தாய் காயத்ரி தேவி. கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காயத்ரி தேவி சில மாதங்கள் முன்னதாக இயற்கை எய்தினார். இந்நிலையில் அவர் இறந்த சில நாட்களிலேயே அவரது கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கில் கணிசமான தொகை அதிகரித்து வந்துள்ளது.

 

சமீபத்தில் தீபக் தன் தயாருடைய வங்கிக் கணக்கை சோதனை செய்த போது அதில் 36 இலக்கத்திற்கு பெரும் அளவில் பணம் இருப்பதாக காட்டியுள்ளது. அதை தீபக்கால் எவ்வளவு கோடி என்று எண்ணக் கூட முடியவில்லை. இதனால் அதன் ஸ்க்ரீன்ஷாட்டை தீபக் தனது நண்பர்களுக்கு ஷேர் செய்து இது எவ்வளவு கோடி என கேட்டுள்ளார்.

 

அதை பார்த்த அவரது நண்பர்களும், உறவினர்களும் வாயை பிளந்துள்ளனர். அவரது தாயார் வங்கிக் கணக்கில் இருந்த பணம் 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ஆகும். அதாவது மொத்தமாக 10 டுவோடிசில்லியன் ஆகும். அதாவது உலகில் உள்ள டாப் பணக்காரர்களின் மொத்த பணத்தையும் சேர்த்தாலும் அது தீபக்கின் 10 டுவோடிசில்லியன் முன்னால் சிறு தொகையே..

 

அந்தளவு தொகையை பார்த்த தீபக் இதுகுறித்து வங்கியில் தகவல் சொல்ல உடனே அவர்கள் அந்த வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். இதுகுறித்து வருமானவரித்துறையினருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இந்தளவு தொகை கோடக் மஹிந்திரா வங்கியிடமே கூட கிடையாது என்பதால் இது ஏதோ தொழில்நுட்ப குறைபாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!