இந்திய அரசியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, இந்தியாவின் நீண்ட காலம் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். ஆனால், தற்போது அந்த சாதனையை தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா முறியடித்துள்ளார்.
ஆகஸ்ட் 5, 2025 நிலவரப்படி, அமித்ஷா உள்துறை அமைச்சராக 2,194 நாட்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், எல்.கே. அத்வானி 1998-99 மற்றும் 1999-2004 வரையிலான தனது இரண்டு பதவி காலங்களில் வகித்த 2,193 நாட்களை கடந்த இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த உள்துறை அமைச்சர் என்ற பெருமையை அமித் ஷா பெற்றுள்ளார்.
அத்வானியின் அரசியல் வாரிசாக கருதப்படும் அமித்ஷா, அவரது நீண்ட நாள் கனவான ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்து, அதை செயல்படுத்தியுள்ளார்.
அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நக்ஸல் வன்முறை ஒடுக்கப்பட்டது, குடிமக்கள் திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற்றப்பட்டது மற்றும் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்தச் சாதனை, அமித் ஷாவின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.