Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வச்சு செஞ்சுட்டாங்க: ஜெயம் ரவியின் "கோமாளி" திரைவிமர்சனம்!

வச்சு செஞ்சுட்டாங்க: ஜெயம் ரவியின்
, வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (17:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி சமீபகாலமாக சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் "கோமாளி"  இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாகேவ பர்ஸ்ட் லுக் போஸ்டர் , டைட்டில் , 90ஸ் கெட்டப்,  ட்ரைலர், ஸ்னீக் பீக் என அத்தனையும் அடுக்கடுக்காக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. எனவே எதிர்பார்த்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கோமாளி என்பதை இங்கே இந்த விமர்சனத்தில் காணலாம். 


 
படம்: கோமாளி
இயக்கம்: பிரதீப் ரங்கநாதன் 
தயாரிப்பு: ஐசரி கணேஷ்
நடிகர்கள்: ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , யோகி பாபு மற்றும் பலர்
இசை: ஹிப் ஹாப் தமிழ ஆதி 
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் நாதன் 
 
கதைக்கரு
 
16 வருடமாக கோமாவில் இருந்த ஒரு 90ஸ் கிட் திடீரென்று கண்விழித்து பார்க்கும்போது தற்போது நவீன உலகத்தில் அவன் கண்டவையெல்லாம் காணாமல் போக பார்க்கும் மாற்றங்ககளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதும்,  இப்போதுள்ள 2கே கிட்ஸ் வாழும் வாழ்க்கை முறைகள் மாற்றங்கள் அவருக்கு எப்படிப்பட்ட வலிகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் மைய கரு. 
 
கதைக்களம்
 
சிறுவயதில் ஜெயம் ரவி, யோகி பாபுவும் குறும்புத்தனமான நண்பர்களாக இருக்கின்றனர். ஸ்கூலில் நடக்கும் காதல். ஏற்படும் விபத்து, கோமாவில் கிடப்பது என படம் ஆரம்பிக்கிறது பின்னர் 16 வருடங்ககள் கழித்து முழித்து பார்க்கும் சமயத்தில் தந்தையின் மரணம், நண்பனே தங்கையின் கணவன், உலகின் அடையாளம் தெரியாமல் மாறிப்போய் கிடக்கும் டெக்னலால்ஜி உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
 
இப்படத்தின் மூலம் 90 காலகட்டங்களில் 90 ஸ் கிட்ஸ் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நம் கண்முன்னே கொண்டு வருகிறது இந்த படம். இறுதியில் நவீனமயமாக்கப்பட்ட உலகத்தில் நாம் எவற்றையெல்லாம் இழந்துள்ளோம் என்பதை உணர்த்துகிறது. இதில் காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து ஒரு கமெர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இந்த படம் உருவாகியுள்ளது.  இரண்டாம் பாதியில் KS ரவிக்குமாரின் அரசியல் சேட்டைகள், பாரம்பரிய சொத்து சிலை என சூடு பிடிக்கிறது. அதன் பின் சிலையை மீட்டாரா நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பது மீதி கதை.
 
படத்தின் ப்ளஸ்: 
 
90ஸ் கிட்ஸாக வரும் ஜெயம்ரவி சிறுவயதில் தான் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகள் அற்புதம். இதில் குறிப்பாக ஜெயம் ரவி பள்ளிப்பருவ பையனான குறும்பு செய்யும் காட்சிகள் பிரம்மாதம். அவருக்கு போட்டியாக யோகி பாபு இந்த படத்தில் இரண்டாவது ஹீரோ போல் இறங்கி வேற லெவலில் காமெடி செய்துள்ளார். படத்தின் பி ஜி எம்மில் ஹிப் ஹாப் ஆதி கொஞ்சம் மென்கெட்டுள்ளார்.
 
படத்தின் மைனஸ் 
 
இரண்டாம் பாதியில்  படத்தின் காட்சிகள் ஒரே இழுவையாக இருக்கிறது.  
ஒரு சில காட்சி எப்போதும் முடியும் என்று தோன்றுகிறது . கடைசி 10 நிமிடம் என்று சொல்லி மெசேஜ் கொடுத்தே போர் அடித்து விடுகிறார் ஜெயம் ரவி.  ஹிப் தமிழா பிஜிஎம்மில் மெனெக்கெட்ட அளவிற்கு பாடல்களில் மெனக்கெடவில்லை. மீண்டும் அதே கிண்ணற்றிற்குள் இருந்து இசையை வசிப்பது போல தான் பாடல்கள் நமக்கு கேட்கிறது.
 
இறுதி அலசல்: 
 
குடும்பத்துடன் பார்க்க நல்ல நகைச்சுவை படம். லாஜிக் பற்றி அதிகம் யோசிக்காமல் சென்றால் முழு திருப்த்தியுடன் திரும்பி வரலாம். குறிப்பாக 90ஸ்களுக்காகவே பார்த்து பார்த்து படமெடுத்திருக்கிறார் இயக்குனர்.  கோமாளி படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு 3.9 /5.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலருடன் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா