யார் அந்த சொப்பன சுந்தரி..! 20 வருடத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ரகசியம்..! குஷியான ரசிகர்கள்!

சனி, 13 ஜூலை 2019 (16:15 IST)
தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதமாக கிடைத்த நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்கள் இருவரின் காம்போவில் வெளிவரும் படங்களை பார்க்க அந்த காலத்து ரசிகர்கள் படையெடுத்து திரையங்கிற்கு சென்றதுண்டு.    
 

 
அந்தவகையில் கங்கை அமரன் இயக்கத்தில்  ராமராஜன் நடிப்பில் 1989ல் வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கண்டமணி காம்போ மிகச்சிறப்பாக அமைந்தது.  இப்கபாறைகளின் வாழைப்பழம் காமெடிய இன்றைய நாளிலும் தமிழ் சினிமா ரசிகர்களை மெய்மறந்து சிரிக்கவைத்துவிடும். படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு திரையரங்கில் ஓடிய இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல காலெக்க்ஷனை பெற்றது. 
 
எனவே இக்காலத்து தலைமுறையினரும் இப்படத்தின் இரணடாம் பாகத்தை எதிர்பார்த்து வருகின்றனர். அந்தவகையில் இப்படத்தின் இயக்குனரான கங்கை அமரனிடம் பலரும் கேட்டுவந்ததை அடுத்து தற்போது 20  இப்படத்தின்  இரண்டாம் உருவாகவிருக்கிறதாம். இது குறித்து பேசிய கங்கை அமரன் , இரண்டாம் பாகத்திற்காக கரகாட்டக்காரன் படத்தில் நடித்த அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது.
 
முதல் பாகத்தில் இடம்பெற்ற சொப்பன சுந்தரி யார்  என்று கரகாட்டக்காரன் 2 படத்தில் கங்கை அமரன் சொல்லப்போகிறாராம். மேலும், சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய நடிகையும் நடிக்க இருக்கிறாராம்.  ஆனால் கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
மேலும் படத்தின் ஹீரோவாக  ராமராஜன் நடிக்கைவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது பற்றிய கூறிய அவர், கங்கை அமரன் கூட என்னிடம் வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று ராமராஜன் தெளிவாக கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இப்படியெல்லாமா பிறந்தநாள் கொண்டாடுறது? எல்லாம் பணத்திமிரு..!