இப்படியெல்லாமா பிறந்தநாள் கொண்டாடுறது? எல்லாம் பணத்திமிரு..!

சனி, 13 ஜூலை 2019 (15:39 IST)
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அதிக கவனத்தை ஈர்த்தனர். பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து தங்களது பிக்பாஸ் வீட்டு நட்பைப் புதுப்பித்து நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். 


 
சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிகொள்ளவார். அந்தவகையில் தற்போது அடுத்த மாதம் வரும் பிறந்தாளிற்கு தற்போது ப்ரீ பர்த்டேவை கொண்டாடியுள்ளார். 


 
அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட யாஷிகாவை அவரது ரசிகர்கள் "என்னதான் படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இப்படி ஒரு மாதத்திற்கு முன்னாள் பிறந்தநாள் கொண்டாடுவதெல்லாம் ரொம்ப ஓவர்"  என்று மோசமாக விமர்சித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரில்லா - விமர்சனம்