'கசடதபற' படத்தின் 6 இசையமைப்பாளர்கள் யார் யார்?

வெள்ளி, 24 மே 2019 (19:04 IST)
விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் 'கசடதபற'. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர்.
 
இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின்  6 இசையமைப்பாளர்கள் குறித்த தகவலை   இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சீன் ரோல்டன், சாம் சிஎஸ் ஆகிய 6 இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளனர். மேலும் நாளை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடவுள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்து வருகிறது

Nandri thandhaiye!!! @gangaiamaren our family of music directors!! #6mdsofkasadatabara #kasadatabara #கசடதபற @thisisysr @Music_Santhosh @GhibranOfficial @Premgiamaren @SamCSmusic @RSeanRoldan https://t.co/shIP0lfKcE

— venkat prabhu (@vp_offl) May 24, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ் பாக்கலாம் போ" கமல் ஹாசனை கலாய்த்த தயாரிப்பாளர்!