இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் ஒன்று கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது தனது இசை அனுபவங்களை பகிர்ந்தார். மாணவிகளிடம் அவர் கூறுகையில் இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை அமைக்க வரும். ஆனால் இன்றைக்கு வருபவர்கள் கையில் சிடியுடன் வருகிறார்கள். அந்தக் காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்ய வேண்டும், வாசிக்க வேண்டும் . ஒவ்வொரு ஸ்வரமும் அமைத்து அதை இயக்குனர் ஓகே செய்து அதன் கவிஞரை கூப்பிட்டு பாட்டு எழுத வைப்போம் என்றார்.
இளையராஜாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதேபோல் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா தெரிவித்தது அப்படியே பதிவிட்டு தன்னுடைய பதிவாக 'மன்னிக்கவும் நான் எல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவைவிமர்சிப்பது போல் அந்த பதிவு இருப்பதாக கங்கை அமரனுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சமூகவலைதளத்தில் பலர் கங்கை அமரனை கண்டித்துள்ளனர். 'எப்போதுமே உங்கள் அண்ணன் பேச்சை நீங்கள் கேட்பது இல்லை' என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.