Publish Date: Fri, 23 Feb 2024 (09:58 IST)
Updated Date: Fri, 23 Feb 2024 (10:01 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 237 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 22.,239 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, ஐடி பீஸ் , கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ் , ஐடிசி, கரூர் வைசியா வங்கி நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து அடுத்த வாரமும் பங்கு சந்தை உயர்வுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.