Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2030க்குள் இந்திய பங்குச் சந்தை உச்சத்தை அடையும்: உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனம்

Advertiesment
2030க்குள் இந்திய பங்குச் சந்தை உச்சத்தை அடையும்: உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனம்

Mahendran

, வியாழன், 22 பிப்ரவரி 2024 (16:30 IST)
இந்திய பங்குச் சந்தை ஏற்கனவே கடந்த சில மாதங்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் 2030க்குள் பத்து ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் அளவுக்கு உச்சத்துக்கு செல்லும் என உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஜெஃப்ரிஸ் கணித்துள்ளது 
 
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி துறை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் 8வது பெரிய நாடாக இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் சந்தை மூலதனம் அதிகரித்து வருவதாகவும் உலக அளவில் ஐந்தாவது பெரிய சந்தையாக இந்தியா இருப்பதாகவும் அதனால் பங்குச் சந்தையின் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும் ஜெஃப்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
2027 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதார நாளாக இந்தியா மாறி இருக்கும் என்றும் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு இந்தியா தள்ளி, மூன்றாவது பெரிய நாடாக மாறிவிடும் என்றும் ஜெஃப்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக எட்டும் என்றும் ஜெஃப்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது ஏன் கடிதம் எழுதுகிறீர்கள்? ஜிகே மணி கேள்வி