பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸ் 60 புள்ளிகள் சரிந்து 72993 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 22,218 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது லாபமே என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கோல்ட் பீஸ், ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், ஐடி பீஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகியவை சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது