Publish Date: Tue, 22 Oct 2024 (11:25 IST)
Updated Date: Tue, 22 Oct 2024 (11:26 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று தங்கம் நாளை விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 7,300 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 58,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,755 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது