Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலையில் கணவருக்காக விரதம்.. மாலையில் விஷம் வைத்து கொலை! - மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!

Advertiesment
காலையில் கணவருக்காக விரதம்.. மாலையில் விஷம் வைத்து கொலை! - மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!

Prasanth Karthick

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:16 IST)

காலையில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரது மனைவி சவிதா. தற்போது வட மாநிலங்களில் நவராத்திரியை ஒட்டிய கர்வா சவுட் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் விரதம் இருப்பது வழக்கம்.

 

அவ்வாறாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஷைலேஷின் நீண்ட ஆயுளுக்காக சவிதா விரதம் இருந்து பிரார்த்தனை செய்துள்ளார். ஆனால் அன்றுதான் தனது கணவர் ஷைலேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

அதன்பின்னர் இருவரும் சமாதானமான நிலையில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார். அதை தொடர்ந்து சவிதாவும் தலைமறைவாகியுள்ளார்.
 

 

ஷைலேஷின் சகோதரர் எதேச்சையாக அங்கு வந்தபோது மயங்கி கிடந்த தனது சகோதரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் உயிரிழந்தார். சவிதாவை ஷைலேஷின் சகோதரர் தொடர்பு கொண்டபோது ’நான் தான் விஷம் வைத்து ஷைலேஷை கொன்றேன்’ என சவிதா கூறியுள்ளார்.

 

அதன் அடிப்படையில் ஷைலேஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சவிதாவை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதுகாப்பு படை வீரர்கள் விஷயத்தில் பிரதமர் மோடி மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பார்- புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு...