Publish Date: Fri, 11 Oct 2024 (10:03 IST)
Updated Date: Fri, 11 Oct 2024 (10:04 IST)
சமீப காலமாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் 6வது நாளில்தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,095 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 56,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,550 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது