வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

Siva
திங்கள், 24 நவம்பர் 2025 (09:57 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மிகக்குறைந்த அளவில் மட்டுமே ஏற்றம் கொண்டிருப்பதால் மதியத்திற்கு மேல் சரிவை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் 65 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 85,234 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 26,089 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், மாருதி வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டி.சி.எஸ்., டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், அப்பல்லோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, நெஸ்ட்லே இந்தியா, சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments