பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 210 புள்ளிகள் உயர்ந்து 84,775 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 25,962 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச் சி எல் டெக்னாலஜி, இண்டிகோ, இன்போசிஸ், ஜியோ பைனான்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.