கடந்த வாரமும் இந்த வாரமும் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே சென்றதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 388 புள்ளிகள் சரிந்து 82,619 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 110 புள்ளிகள் குறைந்து 25 ஆயிரம் 310 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, ஜியோ பைனான்ஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் மற்ற நிப்டியில் உள்ள அனைத்து பங்குகளும் சரிவில்தான் வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது