இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 210 புள்ளிகள் உயர்ந்து 82,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 25,777 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, ஜியோ பைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் இன்று விலை உயர்வுடன் காணப்படுகின்றன.
அதேசமயம், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், மற்றும் டைட்டான் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.