பங்குச்சந்தை நேற்று காலை சற்றே உயர்ந்த நிலையில், மதியத்திற்கு பின் திடீரென குறைந்தது என்பதும், சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவுடன்தான் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 280 புள்ளிகள் சரிந்து 84,850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 105புள்ளிகள் சரிந்து 25,925 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டும்தான் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.