இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்த நிலையில், நேற்று சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 252 புள்ளிகள் உயர்ந்து 85,888 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 26,602 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ICICI வங்கி, இண்டிகோ, ஐ.டி.சி., இன்ஃபோசிஸ், ஜியோ பைனான்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, நெஸ்லே இந்தியா, ஸ்டேட் வங்கி, டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.