கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் நிலவி வருகின்றது. இந்த வாரத்தில், ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் சரிவு என மாறி மாறி இருக்கிறது. இந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் இன்று, பங்குச்சந்தை மீண்டும் சரிவடைந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கியபோது, 100 புள்ளிகள் சரிந்து 76,304 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் சரிந்து 23,112 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, இன்போசிஸ், ராம்கோ சிமெண்ட், டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி, டெக் மகேந்திரா, பேட்டா இந்தியா, இந்தியன் வங்கி, மணப்புரம் பைனான்ஸ், கனரா வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இந்தியா மார்ட், டாடா கம்யூனிகேஷன், ஆயில் இந்தியா போன்ற பங்குகள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.