பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் சற்றுமுன் 630 புள்ளிகள் சரிந்து 76,445 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 152 புள்ளிகள் சரிந்து 23,196 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஐடிசி, எச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ, பிரிட்டானியா, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன. அதேபோல், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும், அதனால் முதலீடு செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.