கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 990 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 316 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. மேலும் ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், சன் பார்மா, ஐடிசி, விப்ரோ, சிப்லா, பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் லீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.