அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டு இருப்பது, உலகப் பங்கு சந்தைகளை அச்சப்படுத்திய நிலையில், இந்திய பங்குச்சந்தையும் இன்று பெரும் அளவு சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் சரியாமல் இருப்பது முதலீட்டாளர்களுக்கு முதலில் நிம்மதியை அளித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 15 புள்ளிகள் மட்டுமே குறைந்து 80,972 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 14 புள்ளிகள் மட்டுமே சரிந்து 24,821 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டி.சி.எஸ்., டைட்டன் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.