இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக நிலையான ஏற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சரிவுடன் தொடங்கியுள்ளது. நேற்றைய சரிவை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாப் பங்குச்சந்தை சரிந்துள்ளது. இது, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 283 புள்ளிகள் சரிந்து, 81,983 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 90 புள்ளிகள் சரிந்து, 25,183 என்ற புள்ளியில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தகத்தில், சில முக்கிய பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. இதில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அடங்கும்.
அதே சமயம், பல முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மற்றும் சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.