இந்த வாரம் தொடங்கியது முதலாகவே பங்குச்சந்தை மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் வங்கிகளின் பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டு வருகின்றன.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வரிக்குறைப்பு நடவடிக்கை என பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி இருந்து வருகிறது. ஆனால் இந்த நிலையிலும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன.
வங்கி நிப்ஃடி குறியீடு பிற வங்கிகளின் செயல்பாடுகளையும் பொறுத்து குறைந்துள்ளது. ஆனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு கடந்த 52 வார கால அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசின் வங்கி கொள்கை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் வங்கிப் பங்குகளில் தற்போது உள்ள வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 20 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மீத 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அரசு வைத்திருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் தான் வங்கிகளின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு சில வங்கிகளை தவிர எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட தனியார் வங்கிகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
Edit by Prasanth.K