இந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று நான்காவது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளது. எனினும், இன்றைய சரிவு மிக குறைந்த அளவே இருந்ததால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், வெறும் 20 புள்ளிகள் சரிந்து 81,586 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி, வெறும் 2 புள்ளிகள் சரிந்து 25,060 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. எனவே இன்னும் சிறிது நேரத்தில் பங்குச்சந்தை உயரவும் வாய்ப்புள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, சன் ஃபார்மா, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
அதே நேரத்தில், ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.