மீண்டும் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. ஃபார்மா பங்குகள் பயங்கர சரிவு..!

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (09:52 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், மருந்துப் பொருள்களுக்கு 100% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்ததால், இன்று பார்மா பங்குகள் மிக மோசமாக சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சன் பார்மா இரண்டு சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது என்றும், சிப்லா கிட்டத்தட்ட ஒரு சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 286 புள்ளிகள் சரிந்து 80,875 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 24,816 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி, ஹீரோ மோட்டார்ஸ், ஐடிசி, மாருதி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பதும், மற்ற நிப்டியில் உள்ள முக்கியமான அனைத்து பங்குகளும் மிக சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments