வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 13 புள்ளிகள் சரிந்து 82,408 என்ற புள்ளியிலும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 25,035 என்ற புள்ளியிலும் வர்த்தகமாகி வருகின்றன. இந்தச் சரிவு, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதே சமயம், டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, ஐ.டி.சி., இன்ஃபோசிஸ், எச்.சி.எல்., டாக்டர் ரெட்டி, சிப்லா, பாரதி ஏர்டெல், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளன