இன்று முதல் ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பங்குச்சந்தையில் இன்சூரன்ஸ் நிறுவன பங்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் நான்கு கட்ட ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அவை இன்று முதல் 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டாக வகுக்கப்பட்டுள்ள நிலையில், பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக எல்ஐசி மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களில் மக்கள் எடுக்கும் தனிநபர் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் தொகைக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 18 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
இதனால் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை குறையும் என்பதால் பலரும் இன்சூரன்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. SBI Life Insurance (1.70%), LIC (1.75%), ICICI Prudential (1.69%), HDFC Life insurance (1.18%) என வர்த்தகம் தொடங்கியதுமே வேகமாக விலை உயரத் தொடங்கியுள்ளன. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் அதேசமயம், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஸ்விக்கி, டிசிஎஸ், ரெட்டிஸ் லேப் என ஐடி மற்றும் மருத்துவ செக்டார் நிறுவன பங்குகள் தொடர் வீழ்ச்சியை கண்டு வருவதால் நிப்ஃடி மற்றும் சென்செக்ஸில் வீழ்ச்சி காணப்படுகிறது.
Edit by Prasanth.K