சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் வரும் நாட்களில் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தங்கத்தில் சேமிக்க இது சரியான தருணம் என்றும் முதலீட்டு ஆலோசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ. 7,930 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 63,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,650 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.