இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டிருந்த நிலையில், இன்று 13 காசுகள் உயர்ந்து, சரிவிலிருந்து சற்று மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 காசுகள் குறைந்துள்ளதாகவும், வாரத்தின் முதல் நாளான நேற்று ரூபாய் மதிப்பு 87.11 ஆக இருந்த நிலையில், இன்று 86.97 ஆக வர்த்தமாகி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கூடுதல் வரி ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தால்தான் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, பல நாடுகளின் கரன்சிகளும் உயர்ந்துள்ளன. ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே வருவதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்திய ரூபாயின் உயர்ந்திருப்பது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.