இந்திய பங்குச் சந்தை நேற்று, நேற்று முன்தினம் சரிந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெரிய அளவில் சரியாமல், மிகவும் குறைவான அளவுதான் சரிந்துள்ளதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குச் சந்தை உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தை 40 புள்ளிகள் மட்டுமே சரிந்து, 78,017 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி வெறும் ஒரு புள்ளி மட்டும் சரிந்து, 23,063 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஹீரோ மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், டைட்டான், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.