வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கு இயங்கிய 7 வழித்தடங்களின் 63 பேருந்துகள் தற்காலிகமாக பிப்ரவரி 9 முதல் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20, 27டி, 23வி ஆகிய பேருந்துகள் ஐசிஎப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி செல்லும். பின்னர் யு-டர்ன் எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிறுத்தம் வழியாக தங்கள் வழக்கமான பாதையில் தொடரும்.
வில்லிவாக்கத்தில் இயங்கிய சிற்றுந்துகள் எஸ் 43, 44 ஆகியவை வழக்கம் போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.
வில்லிவாக்கம் வரை செல்லும் 22 ஆம் எண் பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டு, கொரட்டூர் வரையில் செல்லும். திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயங்கிய 63 ஆம் எண் பேருந்து நீட்டிக்கப்பட்டு, இப்போது ஐசிஎப் வரையும் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.