Publish Date: Mon, 07 Jun 2021 (11:10 IST)
Updated Date: Mon, 07 Jun 2021 (12:24 IST)
கொரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று சற்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,612 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.4,615 இருந்தது. அதேபோல, நேற்று ரூ.36,920 விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.24 குறைந்து ரூ.36,896-க்கு விற்பனையாகிறது.