சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,360 ஆகவும், ஒரு சவரன் ரூ.82,880 ஆகவும் இருந்தது.
ஆனால், சற்று நேரத்திற்குப் பிறகு, தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.83,440 ஆகவும், ஒரு கிராம் ரூ.10,430 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன்மூலம், இன்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,080 உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு, தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலை இன்றைய காலை விலையிலேயே தொடர்கிறது. ஒரு கிராம் ரூ.148 ஆகவும், ஒரு கிலோ ரூ.148,000 ஆகவும் உள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இன்று ஒரே நாளில் காலையில் ரூ.540, மதியத்தில் ரூ.540 என மொத்தம் 1080 தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.