தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, தீபாவளி பண்டிகை தினமான இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.
ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 95,360-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 11,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,600 உயர்ந்து, வெள்ளிக்கிழமை ரூ. 97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் சனிக்கிழமை அன்று விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்த நிலையில், பண்டிகை நாளான இன்றும் விலை குறைந்துள்ளது.
வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 190-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,90,000-க்கும் விற்பனையாகிறது.