கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்தும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும், இந்த விலை குறைப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவில் உற்சாகம் இல்லை.
சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10,220 என்றும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.81,760 என்றும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.11,149 என்றும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.89,192 என்றும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1,000 அதிகரித்து, தற்போது சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,43,000 என விற்பனையாகி வருகிறது.