நாடளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். ஆம், அதிமுக சார்பாக நீலகிரில் போட்டியிடவுள்ள மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.ராசாவை நடிகர் விஜய் வசனம் பேசி விமர்சித்துள்ளார். எடப்பாடி பேசியதாவது, நீலகிரி மாவட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த மாவட்டம். ஜெயலலிதா இருக்கும் போது நீலகிரிக்கு என்ன திட்டங்கள் செய்தாரோ அதே போல தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து தலைவராக செயல்படுகிறார். கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே காசு பார்க்க கூடிய வேட்பாளர் ஆ.ராசா என விமர்சித்தார். அதாவது, ஆர்.ராசா 2ஜி வழக்கில் சிக்கியவர் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே காசு பார்க்க கூடிய வேட்பாளர் ஆ.ராசா என அவர் கூறியது, கத்தி படத்தில் நடிகர் விஜய், கண்ணுக்கு தெரியாத காத்தையே வித்து காசாக்குன ஊரு டா இது என்ற வசனம் அனைவரின் நினைவிற்கும் வந்தது.