நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது
ஆனால் சற்று முன் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது
அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் விஜய் சேதுபதி போன்ற நெருக்கமான திரையுலக நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது