இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். இந்த ஹோலி பண்டிகை கொண்டாடுகின்ற நேரங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் வானவில் வண்ணங்களாக காட்சியளிக்கும். ஒவ்வொரு இடங்களிலும் இப்பண்டிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
மதுரா: மதுராவில் ஹோலி பண்டிகையின் சிறப்பம்சம் என்னவென்றால் நிறங்களுக்கு பதிலாக குச்சிகளை கொண்டு நடனமாடி, வரவேற்பார்கள். இப்பண்டிகையை லத்மர் ஹோலி என்றும் அழைப்பர்.
மேற்கு வங்காளம்: மேற்குவங்காளத்தில் உள்ள புருலியா என்ற இடத்தில் வண்ணப்பொடிகளுடன் மற்றும் பாரம்பரியமிக்க சௌ நடனத்துடனும் ஹோலி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
பஞ்சாப்: பஞ்சாப்பில் உள்ள அனந்தப்பூர் சாகிப் என்ற இடத்தில் வண்ணங்களுடன் மட்டுமல்லாமல் அதிகப் படியான உடல் செயல்பாடுகளால் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் ஹோலி பண்டிகையானது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியில் வண்ணநிற ஆடைகளுடனும், அழகாக அலங்கரீக்கப்பட்ட யானைகள் நிறைந்து இருக்கும். மற்றும் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெறும்.
கோவா: கோவாவில் இப்பண்டிகையை சிக்மோ என்றழைப்பர். இங்கு இந்த பண்டிகை கொண்டாடத்துடன் இசை மேளம் மற்றும் படை அணிவகுப்புகளும் இரவுநேர கேளிக்கை இசைகளும் கேளிக்கைகளுடன் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
மத்தியபிரதேசம்: இந்தூர் - மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் போது நமது இதயமே நடனம் ஆடும். முழு நகரமே ஒரே இடத்தில் ஒன்றுகூடி கொண்டாடுகின்றனர்.