Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் சிறப்புகள்...!!

Advertiesment
அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் சிறப்புகள்...!!
இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். 
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும்  விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.
 
இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகை வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை தங்களது நண்பர்களோடும், உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்வர். மேலும் முகங்களில் கலர் பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கியும் கௌரவிப்பார்கள். 
 
வடஇந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி  நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்  வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். 
webdunia
தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள்.மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி,  மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
 
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணுகிறான். அவர்கள்  இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை  ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதனை நினைவு கூறும் விதமாக கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை  தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது அதாவது மனைவி பிரியமாக  இருக்கிறாள் என்று கூறி மகிழ்வதுண்டு. இவ்வாறாக ஹோலி பண்டிகையை வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கற்றாழையின் பயன்கள்...!!