ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு ஆந்திரா, தமிழகத்தில் இருந்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் அங்கே வருகிறார்கள். சாமி தரிசத்திற்கு பல மணி நேரங்கள் ஆனாலும் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.
பொதுவாகவே செவ்வாய், வெள்ளி மற்றும் வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களின் போது திருப்பதி கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.. குறிப்பாக கோடை விடுமுறைகளான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில்தான் ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு டோக்கன்கள் மற்றும் தங்கும் முறைகள் ஒதுக்கீடு பற்றி ஆன்லைனில் தகவல் வெளியாகியிருக்கிறது. இது பற்றி தேவஸ்தானமே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமல சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாரதனை போன்ற சேவைகளுக்கான தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியானது. அதன்படி வருகிற 21ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்யலாம்.. டோக்கன் படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 21ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கட்டணம் கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கான தரிசன டிக்கெட் உறுதி செய்யப்படும்.
அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளுக்கான தரிசன டிக்கெட் வருகிற 22ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது. அதோடு தரிசன டிக்கெட் 22ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், அங்க பிரதட்சனை டோக்கன்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டோக்கன்கள் மற்றும் மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால நோயால் அவதிப்பட்டு வரும் பக்தர்கள் ஆகியோருக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 24ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்காக 27ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான டோக்கன்கள் மற்றும் அறைகளில் தங்குவதற்கான டோக்கன் ஆகியவற்றுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.